கண்கலங்க வைத்த சாவித்திரி கதாப்பாத்திரம் - ஜீவா சதாசிவம்

April 03, 2018



எங்களது ஊரில் நிகழ்த்தப்படும்  கூத்துக்கலைகளை பார்த்து மனம் மகிழ்
வடையும் ஒரு காலம் இருந்தது. அந்த மகிழ்வை மீண்டும் அனுபவித்த ஒரு
மனநிலைமை  கடந்தவாரம்  கிடைத் தது. அந்த மகிழ்வு சாவித்திரி மூலம் கிடைத்தது.  

ஆம்! கடந்த சனிக்கிழமை (24.03.2018)  'சத்தியவான் சாவித்திரி' என்னும் இசை நாடகத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். 'சத்தியவான் சாவித்திரி' கதைகளை புராணங்களில் படித்ததுண்டு. சிவாஜி கணேசன் நடித்த சினிமாவில் பார்த்ததுண்டு. ஆனால், நேரில் இக் கதையை உயிர்த்துடிப்புடனான கதாபாத்திரங்களினூடாக பார்க்கக் கிடைத்தமை மனதுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. 

கொழும்பு தமிழ்ச்சங்கத்தால் நடத் தப்பட்ட நிறுவுனர் தின நிகழ்வின்  ஓர் அங்கமாக இந்நாடகமும் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் தமக்குரிய பாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இணுவில் கந்தசுவாமி கோயில் இளந்தொண்டர் சபையினர் தயாரித்து வழங் கிய இந்நாடகத்தின்   நெறியாள்கையை- தம்பிஐயா சிவகுமாரன் வழங்கியிருந் தார். 

ஆற்றுகைக் கலைஞர்கள்  நாகையா கிருபாகரன்-- – சத்தியவான்-,  பரமலிங்
கம் அருமைநாதன்– சாவித்திரி, யமதர் மன்– இராசையா பாலராசன், சுமாலி – செகராசபிள்ளை செந்தில்வேல், நாரதர்– நடராசா தவசோதிநாதன் –சித்திரகுப்தன் -நாகரத்தினம் திருக்கணணேஸ், எமதூதர்-– செல்வரத்தினம் உதயகுமார், நடேசமூர்த்தி நவநீதன் ஆகியோரும் பக்கவாத்தியக் கலைஞர்களாக கதிரவேலு முருகையா –மிருதங்கம், கேசவராசா,  தவனேஸ் –ஹார்மோனியம் ஆகியோரும் பங்குபற்றினர். இக்கலைஞர்களுக்கான ஒப்பனையை  - அ.குமார் செய்திருந்தார்.   உண்மையில் ஒவ்வொரு பாத்திரமும் அச்சொட்டாக அதற்கேயுரித்தான தனித்துவத்தைக் கொண்டமைந்ததாக ஒப்பனை இருந்தது. 

கதையை சுருக்கமாக பார்ப்போம் ...

மத்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியபகவானின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்திரி எனப்பெயரிடப்பட்டாள். நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவியுடன் காடுறை வாழ்வு மேற்கொண்டிருக்கிறார். அவரது  மகன் சத்தியவானும் தாய்-, தந்தையருக்கு துணையாக இருக்கிறார்.

தான் மணமுடிக்க திறமை வாய்ந்த இளவரசனைக் கண்டறிய நாடு முழுவதும் சுற்றி இறுதியில் சத்தியவான் தங்கியிருந்த காட்டுக்கு வந்த சாவித்திரி, சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை சத்தியவானிடம் பறிகொடுக்கிறாள். 

தனது திருமணம் சத்தியவானுடன் நடக்க வேண்டும் என தந்தையிடம் கூற அப்போது அங்கு வந்த நாரதர், 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என்று கூறுகிறார். 

 அதனை ஏற்க மறுத்த சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறு எவரையும் மணக்க மாட்டேன் என உறுதிபடக் கூறுகிறாள். சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு, அரசன் அசுவபதியும் திருமணதுக்குச் சம்மதிக்கிறான். சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. சாவித்திரி தன் அரண்மனையை விட்டுக் கணவன் சத்தியவானுடன் காட்டுக்குச் சென்று வாழ்கிறாள்.

சத்தியவான் இறக்கும் நாள் சாவித்திரிக்குத் தெரிந்திருந்த போதிலும் அந்த இரகசியத்தை சாவித்திரி அவனிடம் சொல்லாம லிருக்கிறாள். சத்தியவான் இறப்பதற்கு மூன்று நாட்களும் உணவும் உறக்கமுமின்றி  கடும் விரதம் மேற்கொள்கிறாள் சாவித்திரி.  அடுத்த நாள் விறகு வெட்டச் செல்லும் கணவன் சத்தியவானுடன் செல்கிறாள் சாவித்திரி.

காட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திற்குள் சத்தியவான், சாவித்திரியின் மடிமீது தலை வைத்து உயிர் துறக்கிறான். அப்போது சத்தியவானின் உயிரை அழைத் துச் செல்ல வந்த எமதூதர்களால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்க முடியவில்லை.  எனவே எமதர்மராஜனே நேரில் வந்து சாவித்திரியைப் பார்த்து, சத்தியவானின் உயிர் பிரிந்த உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி என்றதும் சாவித்திரி, சத்தியவான் உடலை விட்டு விலகி நிற்கின்றாள். 
பின்னர் சத்தியவானின் உயிரை எடுத்துச்சென்ற எமதர்மராஜனின் வழியை பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, ஒரு அன்புக் கணவனையும் அவனு
டைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கக்கூடாது என எமதர்மராஜனிடம் வேண்டுகிறாள். சாவித்திரியின் பதிபக்தியை கண்டு பாராட்டிய எமதர்மராஜன், எதாவது ஒரு வரம் கேள் என்கிறார்.

அதற்கு சாவித்திரி,
என் மாமனாரின் சந்ததி அழியாமலிருக்கவும் அவருடைய அரசு சத்தியவானின் மகன்களுக்கு கிடைக்கவும் வரம் வேண்டுகிறாள். அதற்கமைய வரம் கொடுக்கிறார் எமதர்மராஜன். அறியாமல் கொடுத்த வரத்தினால் சாவித்திரியின் கணவனை உயிருடன் மீட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட எமதர்மராஜன் அவரது கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார். 

''உண்மையான அன்புக்கு முன்னால் மரணதேவனான நான்கூட ஆற்றலற்றவன் என்பதற்கு நீ சான்று'' என்று  பாராட்டி வாழ்த்துகின்றார்  எமதர்மராஜன்.  
இந்நாடகத்தில் ஒவ்வொரு  கதாபாத்திரத்திரமும் உயிர்த் துடிப்புமிக்கதாகவே இருந்தது.  இங்கு சாவித்திரியின் கதாபாத் திரம் மிகவும் அருமையா கவும் கண்கலங்கவும் வைத்தது. ஒவ்வொரு காட்சியமைப் புக்குமான பாடல் வரிகள் மிகவும் அருமையாக அமைக்கப்பட்டிருந்தன. ஆடை அணிகலன்களும் பிரமாதமாகவும் அருமையாகவும் அமைக்கப்பட்டி ருந்தன.சபைக்கு வந்திருந்த அனைவரையும் சபாஷ் போட வைத்தது இந்த நாடகம்.

ஒவ்வொருவரதும் நடிப்பும் பக்க வாத்தியங்களின் முறையான வாசிப்பும் சபையோரை கட்டிப்போட வைத்துவிட்டது. ஓர் உயிர்த்துடிப்பு மிக்க இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழ்ச் சங்கத்துக்கும் சிறப்பாக நெறியாள்கை செய்து நாடகத்தை வழங்கிய இக்குழு வுக்கும் நன்றி, பாராட்டுக்கள் இத் தருணத்தில்...  

இவ்வாறான நாடகங்கள் மேலும் பல மேடையேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு...

02.04.2018 
நன்றி    சங்கமம் 
படங்கள் : சுரேந்திரன் அண்ணா 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images